டில்லி

த்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் இந்தியக் குடியுரிமை பெறாதவர் என்பதால் எதிர்க்கட்சிகள் கடு கண்டனம் தெரிவித்துள்ளன.

மத்திய அரசு பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக 2014 டிசம்பர் 31 வரை இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத பிறமதத்தைச் சேர்ந்த 31313 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க  புதிய சட்டத்திருத்தம் மேற்கொண்டுள்ளது.

மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் தாமும் இந்த சட்டத்தின் மூலம் விரைவில் இந்திய குடியுரிமை பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே சி.ஏ.ஏ. சட்டம் மூலம் குடியுரிமை பெற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க உள்ளதாகத் தெரிவித்த மத்திய அமைச்சரின் இந்த பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பாங்கான் மக்களவை தொகுதி உறுப்பினரான 41 வயதான சாந்தனு தாக்கூர் இந்தியக் குடிமகன் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் இந்தியர் அல்லாத ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி எவ்வாறு கொடுக்கலாம் என பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி உள்ளன.

மேலும் வெளிநாட்டைச் சேர்ந்த சாந்தனு தாக்குருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்ததால் நாட்டின் பாதுகாப்பையே பாஜக அரசு கேள்விக்குறி ஆக்கி உள்ளது என எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.