டெல்லி: சமீப காலமாக நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சு, வகுப்புவாத வன்முறை போன்றவறற்றில் மோடி அரசு மவுனம் காப்பதை கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்பட 13 எதிர்க்கட்சிகள் இணைந்து  கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

கர்நாடக ஹிஜாப் சம்பவம், ராமநவமி ஊர்வலத்தின்போது பல மாநிங்களில் ஏற்பட்ட வன்முறை, மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அதிகரித்து வரும் வன்முறைகளைத் தொடர்ந்து, கண்டித்துள்ள எதிர்க்கட்சிகள், ’மதவாத பதற்றத்தில்  பிரதமர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும்,  வகுப்புவாத மோதல் களை வன்மையாக கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்  உள்பட மூன்று முதல்வர்கள், காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  உட்பட 13 எதிர்க்கட்சிகளைக் கொண்ட 13 தலைவர் கள் இன்று, மோடி அரசுமீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

அதில், நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சு மற்றும் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், தனிமனிதர்களின்  உணவு, உடை, நம்பிக்கை, பண்டிகைகள் மற்றும் மொழி தொடர்பான பிரச்சினைகள் சமூகத்தை பிளவுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. இந்த விஷயங்களில் மோடி அரசு மவுனம் காத்து வருகிறது.

உணவு, உடை , நம்பிக்கை, பண்டிகை மொழியை பயன்படுத்தி ஒரு பிரிவினர் பிரச்னையை தூண்டுகின்றனர்.  நாட்டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்பு வாத வன்முறையை கண்டிக்கிறோம். மத ரீதியாக பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து மக்கள் அமைதி காக்க வேண்டும். “நாட்டின் பல மாநிலங்களில் சமீபத்தில் வெடித்த வகுப்புவாத வன்முறையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இச்சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் மோசமான நிலை காணப்படுவதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம்.  ஆயுதமேந்திய மத ஊர்வலங்களுக்கு முன், இனவாத வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அந்த பகுதிகளில் ஒருதரப்பினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் நடந்தன” என்று  குற்றம் சாட்டியுள்ளனர்.

நாட்டில் வெறுப்பு பேச்சை தூண்டுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது. சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழகத்தின் மு.க.ஸ்டாலின், ஜார்கண்டின் ஹேமந்த் சோரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐயின் டி ராஜா, ராஷ்ட்ரிய ஜனதா ஆகியோர் மேல்முறையீடு செய்த மற்ற அரசியல் தலைவர்கள். தளத்தின் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேசிய மாநாட்டு தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆனால், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திடவில்லை என்று கூறப்படுகிறது.