ஒன்லி ஃபார் தியேட்டர்ஸ்’’ தமிழ் சினிமாவில் புதிய முயற்சி..

ஓ.டி.டி. எனப்படும் இணைய தளங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள, நெருக்கடியைப் பயன்படுத்தி, புதிய சினிமா படங்களை தாங்களே வாங்கி குவிக்கின்றனர்.
தியேட்டர்களில் வெளியாகும் முன்பே, புதிய சினிமாக்களை இணைய தளங்கள் ரிலீஸ் செய்வதால், திரையரங்கு உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளர்.
இந்த பிரச்சினைக்கு தற்காலிக முடிவு காணும் முயற்சியாக, ‘’தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு   மட்டுமான ( ஒன்லி ஃபார் தியேட்டர்ஸ்) படங்களை தயாரிப்பது என தமிழ் சினிமா உலகின் மூன்று ஜாம்பவான்கள் யோசித்தனர்.
அந்த திட்டத்தை  செயல் படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.
விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், தயாரிப்பாளர்கள் ’பிரமிட்’ நடராஜன், ஆர்.பி.சவுத்ரி ஆகிய மூவர் தான் அந்த ஜாம்பவான்கள்.
சில பங்குதாரர்களை சேர்த்துக்கொண்டு, இந்த படத்தை மூவரும் தயாரிக்க உள்ளனர்.
இந்த படத்தை இயக்க கே.எஸ்.ரவிக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.
சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.
விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 25 நாட்களில் இந்த படத்தை இயக்கி முடிப்பதாக உறுதி அளித்துள்ளார், கே.எஸ்.ரவிக்குமார்.

– ஏழுமலை வெங்கடேசன்