200 ஆண்டுகளில்  4 முறை மட்டுமே.. சென்னையில் 1000 மி.மீ மழை..

Must read

சென்னை: 
சென்னை:  நவம்பர் மாதத்திற்கு 1000 மி.மீ.யை கடக்கச் சென்னைக்கு மேலும், வெறும் 70 மி.மீ அதிகம் மழைதான் தேவை. 200 வருடங்களில் 4 முறை மட்டுமே நவம்பர் மாதம் இதுபோல 1000 மி.மீ மழையைச் சென்னை நவம்பரில் கடந்துள்ளது எனத்  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,    கடலூர், காரைக்கால், விழுப்புரம் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூருக்கான நேரம். நவம்பர் மாதத்திற்கு 1000 மி.மீ.யை கடக்கச் சென்னைக்கு மேலும், வெறும் 70 மி.மீ அதிகம் மழைதான் தேவை. 200 வருடங்களில் 4 முறை மட்டுமே நவம்பர் மாதம் இதுபோல 1000 மி.மீ மழையைச் சென்னை நவம்பரில் கடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் ஒரு மாதத்தில் 1000 மி.மீ., மழைப் பதிவானது இது 4-வது முறையாகவும், 200 ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் 3-வது முறையாகவும் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலில்,
1088 மிமீ – நவம்பர் 1918
1078 மிமீ – அக்டோபர் 2005
1049 மிமீ – நவம்பர் 2015
1003 மிமீ – நவம்பர் 2021 (நவம்பர் 27 – இரவு 7.30 வரை)
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article