தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்ததன் காரணமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை விளையாடுவோரை எச்சரிக்கும் வகையில் அந்த நிறுவனங்களே கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

புதிய கட்டுப்பாடுகளின்படி ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாட முயன்றால் விளையாடுவோரின் இருப்பிடத்தை ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து எச்சரிக்கை தகவல் காட்டுவதுடன் தடைவிதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையை மீறி ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை விளையாடுவோர் மீது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டத்தை மீறி தமிழ்நாட்டில் விளையாட்டுகளை நடத்துவதை அனுமதிக்கப்போவதில்லை என்றும் ரேடியோ அலைவரிசை, வைபை, இணையம் ஆகியவற்றின் மூலம் இருப்பிடத்தை கண்டறிந்து ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவது தடுக்கப்படும் என்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.