திருவனந்தபுரம்,
கேரளாவில் ஆன்லைன் மூலம் மதுவிற்பைனையை தொடங்க முடிவு எடுத்த அரசு, தற்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் அந்த முடிவை கைவிட்டு உள்ளது.
நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மார்ச்சிய கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை பிடித்து. கேரளாவில், மார்க் சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்தபினராயி விஜயன்  முதல்வராக பதவி ஏற்றார். அவர் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியின்போதே பெரும்பாலான மதுக்கடைகள்,  ‘பார்’கள் மூடப்பட்டன.
KERALA WINE SHOP
அதைத்தொடர்ந்து கம்யூனிஸ்டு ஆட்சியிலும் மதுஒழிப்பை தீவிரமாக அமல் படுத்தி வருகின்றனர். தற்போது நட்சத்திர ஓட்டல்கள் மற்றும், ‘கன்ஸ்யூமர் பெட்’ எனப்படும், கேரள அரசு, கூட்டுறவு நிறுவனம் நடத்தும் கடைகளில் மட்டுமே மது  தற்போது, மது விற்கப்படுகிறது.
அடுத்த மாதம் வர இருக்கும் கேரளாவின் சிறப்பு மிக்க ஓணம் பண்டிகையை 10 நாட்கள் நடைபெறும். இந்த சமயத்தில் மதுவிற்பனை அதிகரிக்கும். தற்போது கடைகள் பெருமளவு குறைந்துவிட்டபடியால், இருக்கும் ஒரு சில கடைகளில் மது குடிப்போர், வாங்குவோர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது, இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம்  என நினைத்து, ஆன்லைன் மூலம் மது வகைகளை முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த கேரள அரசு முடிவு எடுத்தது.
அரசின் இந்த முடிவுக்கு  கேரள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து ஆன்லைன்  திட்டத்தை, கேரள அரசு கைவிட்டுஉள்ளது.
இதைத்தொடர்ந்து கேரள கூட்டுறவு அமைச்சர் ஏ.சி.மொய்தீன் கூறும்போது, ஆன்லைன் மது விற்பனை பற்றி வெளியாக தகவல்கள் ஆதாரமற்றவை. அரசு அதுபற்றி எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்றார்.