மன்னார்குடி: 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறி இருக்கிறார்.

மன்னார்குடி வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: எகிப்து, துருக்கி நாடுகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

அதன்பின் வெங்காயம் விலை   கட்டுக்குள் வரும். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாகவே வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இது நிரந்தரம் கிடையாது.

வெங்காயம் விலையேற்றமாக இருக்கக்கூடிய பொருள்  அல்ல. தமிழகத்தில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் நியாய விலைக்கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.