புதுக்கோட்டை: ஓராண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டையிலிருந்து, அறந்தாங்கி வரை செல்லும் பேருந்து சேவையை இன்று தொடங்கி வைத்தார். அதையடுத்து, அவர் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, ஏற்கனவே கடந்த கால திமுக ஆட்சியின் போது, அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டைக்கு நகரப் பேருந்து இயக்கப்பட்டது. ஆனால், அது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. தற்போது, திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அரசு டவுண் பஸ் இயக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதையடுத்து, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தவர், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகளைப் பாதிக்கும் எந்தவித திட்டமாக இருந்தா லும் தமிழகத்தில் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றவர், காவிரி, டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் ஒருபோதும், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
தமிழ்நாட்டில் மஞ்சள் பை திட்டத்தை அறிமுகப்படுத்திய போது வெற்றித்தருமா என்று யோசிச்சோம். ஆனால், பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக் கிறது. இன்னும் ஓராண்டிற்குள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி (பிளாஸ்டிக்) முற்றிலுமாக அகற்றப்பட்டு நெகிழி இல்லாத தமிழகமாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.