கமல்ஹாசன் கட்சியில் இருந்து மேலும் ஒரு விக்கெட் காலி… பொதுச்செயலாளர் குமரவேல் விலகல்

Must read

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருந்தோல்வி அடைந்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் குமரவேல் விலகுவதாக அறிவித்து உள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், மற்றும் முக்கிய நிர்வாகிகளான தங்கவேல், மவுசரியா ஐஏஎஸ், உமாதேவி, உள்ளிட்ட பலர் ராஜினாமா செய்துள்ளனர்.  விலகிய அனைவருமே கமல்ஹான் மீதே குற்றம்சசாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது  மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சிகே குமரவேல், கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் இன்று விலகி உள்ளார். இது தொடர்பாக பகிரங்கமாக கமலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

“தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கிற அரசியலை கைவிடுகிறேன்” என விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article