மாறுவேடத்தில் சசிகலாவிடமிருந்து தப்பினேன்!: எம்.எல்.ஏ. சரவணன் பேட்டி

Must read

 

சசிகலா தரப்பினரால் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் அடைத்துவைக்கப்பட்ட தான், மாறுவேடத்தில் தப்பி வந்ததாக மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர் செல்வம் தன்னை மிரட்டி தான் சசிகலா ராஜினாமா செய்ய வைத்தனர் என்று தெரிவித்து அதிர வைத்தார்.

இதையடுத்து பன்னீர் செல்வம் , சசிகலா இருவரும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.

இதற்கிடையே சசிகலா அணியில் இருந்த ஏழு எம்.எல்.ஏகள் பன்னீர் செல்வம் அணிக்கு  தாவினார்கள். இந்தநிலையில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-கள், 127 பேரை கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையியில் மதுரை தெற்கு தொகுதி எம்.எல். ஏ சரவணன் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  அவர், சசிகலா தன்னையும் மற்ற பல எம்.எல்.ஏக்களையும் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் அடைத்து வைத்ததாகவும், தான் மாறுவேடத்தில் தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article