சென்னை: திருநங்கையருக்கு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு இலவச சீட் இலவசம் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அசத்தலான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் சாதாரண மக்களைப் போலவே திருநங்ககைகளும் வாழ, மாநில அரசு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், திருநங்கைகள் மேலும் கல்வி அறிவுபெறும வகையில், ஒவ்வொரு கல்லூரியிலும் திருநங்கையருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு இலவச சீட் வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார்.
, “சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருக்கக் கூடிய 131 கல்லூரிகளிலும் தலா ஒரு இடங்கள் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்படும் .இந்த நடைமுறைக்கு சிண்டிகேட் ஒப்பந்தல் தந்தவுடன் வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]