டில்லி

ச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வரும் ஆதார் வழக்கில் அவர் கருத்துக்கள் ஆதாருக்கு எதிராக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆதார் எண் தற்போது அனைத்து அரசு உதவிகளுக்கும் மானியத்துக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.    அது வங்கிக் கணக்குகளில் இருந்து மொபைல் இணைப்பு வரை அனைத்த்துக்கும் சிறிது சிறிதாக அவசியமாகி உள்ளது.   இதனால் பொது மக்களின் விவரங்கள் திருடப்படுவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.    ஆதார் அனைத்துக்கும் தேவை இல்லை என தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தென் ஆப்ரிக்காவில் காந்தி

இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இது குறித்து ஒரு சரித்திர பூர்வ தகவலை தர விரும்பியதாக கூறினார்கள்.   அதை நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர்.   அப்போது,  “திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும்,  போக்கிரிகளிடமும் மட்டுமே கை ரேகை பதிவுகளை அரசு வாங்கி வைத்துக் கொள்ளும்.   இது குறித்து தென் ஆப்ரிக்காவில் இருந்த போது காந்தி இது போன்ற நடைமுறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துளார்.

அந்நாட்டில் இந்தியர்கள் தங்கள் கை ரேகை பதித்து ஆவணங்கள் பெற்ற பின்பு தரப்படும் உரிமத்தைக் கொண்டே அரசு பணிகள் பெற முடியும்    அத்துடன் அது தனியாருக்கும் விரிவாக்கப் பட்டது.   இந்த நடைமுறையை காந்தி எதிர்த்து அங்கு வெற்றியும் பெற்றுள்ளார்.     இது மனிதத்தன்மைக்கும் மனித நேயத்துக்கும் எதிரானது என அப்போது காந்தி தெரிவித்துள்ளார்.”  என காந்தியின் நினைவு நாள் அன்று காந்தியின் உரையை மேற்கோள் காட்டி உள்ளனர்.