மதுரை,
ம்னி பேருந்து கட்டணம் குறித்து நிர்ணயிக்க குழு அமைக்க தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க அரசுக்கு உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
omni-bus
தமிழகத்தில் விசேஷ நாட்களில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் அதிக அளவில் உயரும். ஆம்னி பேருந்து நிர்வாகிகளே கட்டணத்தை உயர்த்திவிடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிக்கை வெளியிட்டனர்.
இந்த அறிக்கையை பார்த்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் தாமாகவே முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டனர்.
மேலும் இந்த வழக்கில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயிக்காதது ஏன் என்றும், தமிழக அரசுஅரசு பதில் தருமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.  வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
டிக்கெட் கட்டணம் குறித்து  ஆம்னி பேருந்துகள்  சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் வாதாடினர். அதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
madurai-high-court
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,
ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். தனி நபருக்கான கட்டணத்தை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் நிர்ண யிக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் விரிவான உத்தரவை திங்கட்கிழமை பிறப்பிப்பதாக தெரிவித்து உள்ளனர்.