இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் என்றபோதும் தடுப்பூசி காரணமாக நோய் பாதிப்பு மிதமாகவே இருக்கும் என்று தென் ஆப்ரிக்க மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

ஓமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலில் தகவல் கொடுத்த தென் ஆப்ரிக்க மருத்துவர் ஏஞ்சலிக் கோயெட்ஸ் மற்றும் தென் ஆப்ரிக்க மருத்துவர்கள் சங்க தலைவர் ஆகியோர் இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர்.

Dr. ஏஞ்சலிக் கோயெட்ஸ்

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இவ்வகை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது என்றும் கூறியுள்ள அவர்கள், தடுப்பூசி போடாதவர்கள் 100 சதவீதம் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

தற்போதுள்ள தடுப்பூசி ஓமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்த போதுமானது, நோய் தொற்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மூலம் குறைந்த அளவே பரவ வாய்ப்பு உள்ளது ஆனால் தடுப்பூசி போடாதவர்கள் மூலம் கட்டாயம் நோய் பரவல் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.

ஓமைக்ரான் பரவலுடன் கொரோனா பரவல் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறுவதை ஏற்கமுடியாது, இது உள்ளூர் பரவலாக தொடர்ந்து கொண்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்கும் போது நேர்மறை சதவீதம் அதிக எண்னிக்கையில் இருக்கும் என்று எச்சரித்த அவர்கள், இருந்தபோதும் நோய் பாதிப்பு தென் ஆப்ரிக்காவில் உள்ளது போல் மிதமாகவே இருக்கும் என்று கூறியுள்ளனர்.

இந்த புதிய உருமாறிய கொரோனா பரவல் பீதி ஏற்படுத்தும் வகையில் இல்லை என்றாலும் அது பரவும் வேகம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.