டில்லி

ந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 100 ஐ கடந்துள்ளதால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்

உலகெங்கும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை குறைந்து வருகிறது.  அதையொட்டி மக்கள் சற்று நிம்மதி அடைந்த  நிலையில் திடீரென உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.  குறிப்பாக உருமாற்றம், அடைந்த கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பாதிப்பு தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது.

உலகில் பல  நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது.   தற்போது இங்கிலாந்து, இந்தியா, ஜப்ப்பான், சீனா உள்ளிட்ட 91 நாடுகளில் ஒமிக்ரான் பரவி உள்ளது.  இதையொட்டி பல நாடுகளில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பிரிட்டன் அரசு கொரோனா  தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடும் பணியைத் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஐ தாண்டி உள்ளது.  இதனால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.  இந்தியாவில் டில்லி, ஆந்திரா, சண்டிகர், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பாதிப்பு அதிகம் உள்ளது.  குறிப்பாக மகாராஷ்டிராவில் 32 பேருக்குப் பாதிப்பு உள்ளது.   தமிழகத்தில் இதுவரை ஒருவருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 101 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர்