டில்லி:

ரெயில் பயணிகளின் பயணத்தை எளிமையாக்கும் விதத்தில், ஐஆர்சிடிசியும், ஓலா கார் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளது.

இணையதளம மூலம் ரெயில் டிக்கெட் பதிவு செய்யும்போதே, ரெயில் நிலையத்தில் இருந்து தாங்கள் போக விரும்பும் இடத்திற்கான வாகன பதிவும் செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.

 

இந்த ஒப்பந்தத்தின் படி, ஐஆர்சிடிசி ( IRCTC) இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் ரெயில் டிக்கெட்டுக்கள் பயணம் செய்பவர்கள், தாங்கள் இறங்கும் ரெயில் நிலையத்தில் இருந்து, தாங்கள் போக விரும்பும் பகுதிக்கு செல்ல ஏதுவாக, ஓலா நிறுவன (OLA) வாகனங்களை, ஐஆர்சிடிசி  தளத்திலேயே முன்பதிவு செய்துக்கொள்ள வசதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம்,   பயணிகளுக்கு வழக்கமாக அளிக்கபடும் வசதிகள் போலவே Ola Micro, Ola Mini, Ola Auto, Ola Share etc வசதிகள் அளிக்கப்படும் என்றும், கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என ஓலா நிறுவனம்ன தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ரெயில்வே துறையின் செய்தி தொடர்பாளர், பயணிகளின் பயணத்தினை எளிமையாக்கும் நோக்கிலேயே இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதியின் மூலம் 7 நாட்களுக்கு முன்பாகே ஓலா வாகனத்தை  பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.