சென்னை

தேர்தலில் அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதி கோரி ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

ஓ பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பில் இருந்தும் காரசார வாதங்கள் நிறைவுபெற்றதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு, அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டார்..எனவே, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்தி மனுவில்,

“நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். தை இடைக்கால நிவாரணமாக இதனை வழங்க வேண்டும். மேலும் வேட்பாளர், சின்னத்தை அங்கீகரித்துக் கையெழுத்திட அதிகாரம் வழங்க வேண்டும்;.  அத்துடன் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் பொதுச் சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும்”

என்று கோரிக்கை விடுத்துள்ளார்.