பிஷாடா, உத்திரப் பிரதேசம்

தாத்ரி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணி அளிக்கவில்லை என நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

உத்திரப் பிரதேசம் தாத்ரி பகுதியில் உள்ளது பிஷாடா கிராமம்.  இந்து வசித்து வந்தவர் முகமது அக்லாக்.   இவர் ஒரு பசுவைக் கொன்று அதன் மாமிசத்தை உண்டதாக வந்த தகவலை ஒட்டி ஒரு கும்பலால் வீட்டில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார்.  இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 15 பேருக்கு, இந்துள்ள நேஷனல் பவர் கார்ப்பரேஷனால் இயக்கப்படும் மின் உற்பத்தி சாலையில் ஒப்பந்த பணியாளர்களாக பணி வழங்கப்பட்டதாகவும் அதற்கு உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் சிபாரிசு செய்ததாகவும் ஒரு தகவல் வெளியானது.   அதைத் தொடர்ந்து நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கார்பரேஷன், “தாத்ரியில் உள்ள மின் உற்பத்தி சாலையில் கொலையாளிகளுக்கு பணி அளித்ததாக வந்த தகவல் தவறானது.  ஆதாரமற்ற அந்த தகவலை நிர்வாகம் மறுக்கிறது.  இந்த முகமது அக்லாக் கொலையில் சம்பந்தப்பட்ட யாருடனும் எந்த ஒரு ஒப்பந்தமும் இடவில்லை.  அதே போல எனத ஒரு பணியிலும் அவர்கள் அமர்த்தப்படவில்லை.   மேலும் இந்த நிறுவனத்துக்கு சமுதாய அக்கறை உள்ளதால் நாட்டின் முன்னேற்றத்துக்கு மட்டுமே பாடுபடும்.   எந்த ஒரு சமூக விரோதிக்கும் ஆதரவு அளிக்காது” என அறிவித்துள்ளது.