கமதாபாத்

குஜராத் பசுச்சேவை வாரியம் கோமியமும் பசுஞ்சாளியும் உபயோகித்தால் பெண்கள் அழகு கூடும் என அறிவித்துள்ளது.

குஜராத் பசுப்பாதுகாப்புக்காக பசுச்சேவை வாரியம் இயங்கி வருகிறது.  இந்த வாரியம் சமீபத்தில் தனது இணைய தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது.   அதில் பெண்கள் அழகுக்காக  ரசாயனங்களால் செய்யப்படும் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தது.    அதில் அழகுப் பொருளாக பஞ்ச கவ்யம் (பசுவின் சிறுநீர், சாணி, பால், தயிர் மற்றும் வெண்ணெய் சேர்ந்த ஒரு கலவை) குறிப்பிடப்பட்டிருந்தது.   அ

அந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு :

“பெண்கள் தங்களின் ரசாயனம் கலந்த அழகுச் சாதனங்கள் உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.   இயற்கை அழகுச் சாதனங்களுக்கு மாற வேண்டும்.   பஞ்சகவ்யம் அறுந்துவதால் மேனி பளபளப்பாகி முக அழகு அதிகரிக்கும்.   கோமியம் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்களையும் முகப்பருவையும் நீக்கலாம்.   பசும்பாலையும், பசுஞ்சாணியையும், கோமியத்தையும் உபயோகிப்பதால் 108 வகையான வியாதிகள் குணமாகும்,  கேன்சர், எய்ட்ஸ், ஆஸ்துமா அடியோடு நீங்கி விடும்.   மேலும் கோமியமும் பசுஞ்சாணியும் உபயோகிப்பதால் அருக்காணிகளையும் அழகு ராணி கிளியோபாட்ராவாக ஆக்கிவிடும்” என கூறப்பட்டுள்ளது.