மிழகத்தில் முதல் பெண் முதல்வரும், 24நாட்கள் மட்டுமே அரியனையில் அமர்ந்து ஆட்சி செய்தவருமான மறைந்த ஜானகி இராமச்சந்திரன் பிறந்த நாள் இன்று (நவம்பர் 30, 1923)  அவரது பிறந்தநாளை அரசு கவுரவிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

வைக்கம் நாராயணி ஜானகி (V.N.Janaki)  கேரள மாநிலம் திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1924 செப்டம்பர் 23ஆம் நாள் பிறந்தார். இவருக்கு மணி என்ற நாராயணன் என்னும் தம்பி இருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக பிழைப்பு தேடி அவரது குடும்பத்தினர் சென்னை வந்தனர். சென்னைக்கு வந்த பின்னர், வி.என்.ஜானகி  திரைப்படங்களில் நடிக்க விரும்பினார். ஆனால் நாராயணி அம்மாளுக்கு அதில் விருப்பம் இல்லை. இருப்பினும் ராசகோபாலய்யரின் ஊக்குவிப்பால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.  எம்ஜிஆர் உள்பட பலருடன் சுமார் 26 படங்களில் நடித்துள்ளார்.

ஜானகி திரையுலகில் நுழைந்த சில காலத்திற்குள் நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதிபட் என்னும் கன்னடமொழிக்காருக்கு அறிமுகம் ஆனார். அவ்வறிமுகம் காதலாக மாறி, திருமணமாக முடிந்தது இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என்னும் ஆண்குழந்தை பிறந்தது.

ஜானகி இராஜ முக்தி படத்தில் கதைத் தலைவியாக நடித்தபொழுது, இரண்டாவது கதைத் தலைவனாக எம். ஜி. ஆர். நடித்தார்.  விஎன் ஜானகியின் சாயர், எம்ஜிஆரின் முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலின்  இருந்ததால்,  ஜானகி மீது ர்ப்பு ஏற்பட்டது. அதையடுத்து மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. அதையடுத்து, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும்,  இது 1950ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட  மருதநாட்டு இளவரசி படத்தில் தீவிரமான  நிலையில், எம்.ஜி.ஆர், ஜானகிக்கு எழுதிய கடிதங்கள், வி.என்.ஜானகியின் கணவரான, கண்பதிபட்டின் கைகளில் கிடைக்க, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, வி.என்.ஜானகி, கணவர், கணபதிபட்டை விட்டு, நள்ளிரவொன்றில் தன் மகனுடன் வீட்டைவிட்டு வெளியேறி,  எம்ஜிஆரிடம் அடைக்கலம் புகுந்தார்.  பின்னர் சில காலங்கள் கழித்து, கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரும், ஜானகியும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கு எம்ஜிஆர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, நோய்வாய்ப்பட்ட எம்ஜிஆரின் 2வது மனைவியான  சதானந்தவதியும் மறைந்த நிலையில்,   1962 ஜூன் 14ஆம் நாள் எம்.ஜி.ஆரும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தை பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டைலிருந்து கிளம்பி இராமவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர். ஜானகியின் மகனான அப்பு என்ற சுரேந்திரனை எம்.ஜி.ஆர். தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.

இருந்தாலும், எம்.ஜி.ஆர் அரசியலில் கால்பதித்தபோது, அதில் தலையிடாமல் ஒதுங்கி குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்தார். 1984 ஆம் ஆண்டில் எம்ஜி.ஆர்.  நோய்வாய்ப்பட்ட பிறகே, அவருடன்  பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார்.  பின்னர், 1987 டிசம்பர் 24 ஆம் நாள் எம்ஜிஆர் மரணமடைந்த நிலையில், ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக, ஜானகி தமிழக முதல்வராக அமர்த்தப்பட்டார்.

1988 சனவரி 7 ஆம் நாள் ஜானகி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால் சட்ட மன்றத்தில் தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 சனவரி 30 ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார்.  24 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்த நிலையில், அவரது ஆட்சி கலைந்தது. பின்னர்,  அரசியலில் இருந்து விலகி ம. கோ. இரா.வின் இராமவரம் தோட்டத்தில் தன் மகனோடும் வளர்ப்புப் பிள்ளைகளோடும் வாழ்ந்தார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய காதுகேளதாதோர் பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்தபடி, தனது இறுதிக் காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், கடந்த 1996 மே மாதம் 19-ம் தேதி 73-வது வயதில் மறைந்தார்.

இன்று அவரது பிறந்த தினம் குடும்பத்தினரால் அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் என்பதால், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்துகவுரவிக்க வேண்டும் என்று  தமிழகஅரசு அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.