டில்லி

நோட்டாவுக்கு வாக்களிப்பதால் தேர்தல் முடிவுகளில் ஏற்படும் தாக்கத்தை குறித்து இங்கு காண்போம்

தேர்தலில் போட்டியிடுவோர் யாரையும் வாக்காளருக்கு பிடிக்கவில்லை என்றால் நோடா (NONE OF THE ABOVE) என வாக்களிப்பது வழக்கம்.    முதலில் இதற்காக ஒரு படிவம் மூலம் வாக்கு அளிக்கும் நிலை இருந்தது.  கடந்த 2013 முதல் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மூலம் நோட்டாவுக்கு வாக்களிக்க வகை செய்யப்பட்டது.    தற்போது நோட்டா என்பது பிரபலமாகி உள்ளது.

கடந்த 2013 முதல் 2017 வரை நடந்த 37 தேர்தல்களிலும் மொத்தமாக நோட்டாவுக்கு 2.7 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.   இந்த நோட்டா வாக்குகள் எண்ணிக்கை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேரத்துக்கு மட்டுமே பயன்படும் நிலை உள்ளது.   இதனால் எந்த ஒரு கட்சிக்கும் ஆதாயமும் இல்லை, இழப்பும் இல்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் வெற்றி வாய்ப்பை மிகக் குறைந்த வித்தியாசத்தில் இழக்கும் வேட்பாளர்களுக்கு இந்த நோட்டா வாக்குகள் தங்களுக்கு கிடைத்திருக்கலாம் என எண்ண வைக்கிறது.    ஆனால் எந்த ஒரு தேர்தலிலும் வாக்கு வித்தியாசமும் நோட்டாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் இருந்ததில்லை என்பதே நிதர்சனம் ஆகும்.

கடந்த 2018 ஆம் வருடம் நடந்த தேர்தல்களில் நோட்டாவுக்கு அதிக பட்சமாக சத்தீஸ்கரில் 2% மற்றும் மிசோரமில் 0.5% மட்டுமே கிடைத்துள்ளன.  மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே வெற்றி பெற்ற மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்த வேட்பாளர்கள் இடையே மிகக் குறைந்த வித்தியாசம் இருந்தன.    ஆயினும் அந்த வித்தியாசம் அந்தந்த தொகுதிகளில் நோட்டாவுக்கு கிடைத்ததை விட மிகவும் குறைவே ஆகும்.

எனவே இதுவரை நடந்த எந்த தேர்தல்களிலும் நோட்டா வாக்குகளால் தேர்தல் முடிவுகளில் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை எனவே கூறலாம்.