சென்னை: தமிழக சட்டப்பேரவை அறிவித்தபடி இன்று காலை கூடியது. பேரவையில் திருக்குறளை சுட்டிக்காட்டி ஆளுநர் தனது  உரையை தொடங்கினார். ஆனால்,  நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று ஆளுநர் உரையை உடனே முடித்துவிட்டு அமர்ந்தார்,..  இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பேரவைக்கு வந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பேரவை அதிகாரிகள் வரவேற்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பேரவையில் காலை 10,05 மணிக்கு. ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். தொடர்ந்து 2  நிமியங்களிலேயே தனது உரையை முடித்தார். தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை முழுவதும் படிக்காமல், சிறிதளவே படித்த நிலையில், பேரவை தொடக்கம் நிகழ்த்தப்படும் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் உரையை முடித்து விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.

உரையின்பேது பேசிய ஆளுநர் ரவி,   சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம்  பாடக வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். தேசிய கீதத்தை பேரவை தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன் அது ஏற்கப்படவில்லை. பேரவையில் தேசிய கீதம் புறக்கணிக்கப் பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியதுடன்,   உரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுடன் முரண் படுகிறேன், அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்ல  என்று கூறியதுடன், வாழ்க தமிழ், வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என  உரையை 4 நிமிடத்திலேயே முடித்துக் கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

 ஆளுநர் உரைக்கு பின்னர், பேரவை தலைவர் ஆளுநர் உரையை வாசித்தார். இதையடுத்து, அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்களுக்கு அவையை நடத்தலாம் என முடிவுசெய்யும். ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை 3 நாட்கள் வரை நடத்த திட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.