சென்னை: தமிழகத்தில்  மக்களவை தேர்தல்  வாக்குப்பதிவு 72.09% இல்லை;  69.46% என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இறுதியாக தெரிவித்து உள்ளது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.   முதல்கட்ட தேர்தலில் 64%  வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 9மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு,  தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு  72.09 சதவீதம்  பதிவானதாக  தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது, தமிழகத்தில் 69% வாக்குகள் பதிவாகியுள்ளன என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல் மக்களை குழப்பி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் கமிறங்கியிருந்தனர். அவர்களின்  தலைவிதியை தீர்மானிக்கும் வகையில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடெபற்றது.    நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 68.96% வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2009, 2014 மற்றும் 2019 ஆகிய மூன்று பொதுத் தேர்தல்களிலும் முறையே 73.02%, 73.74% மற்றும் 72.47% வாக்குகள் பதிவாகியுள்ளன.  இந்த நிலையில், இந்த முறை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. குறிப்பாக, மூன்று லோக்சபா தொகுதிகளைக் கொண்ட சென்னையில் வழக்கமாக குறைந்த வாக்குப்பதிவாகி உள்ளது.  இரவு 7 மணி வரை அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகளும், தருமபுரியில் 75.44% வாக்குகளும் பதிவாகியுள்ளன. சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை தெற்கில் 67.35% மற்றும் 67.82% வாக்குகள் பதிவாகியுள்ளன. கோவை போன்ற முக்கிய தொகுதிகளில் 71.17%, தூத்துக்குடி- 70.93%, கன்னியாகுமரி- 70.15% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல் பெரும்பான்மையான இடங்களில் மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது. ஆனால், ஒருசில இடங்களில் 6 மணிவாக்கில் வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு மட்டும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் வழிவகை செய்தனர். இதனால், தாமதமாக வந்த போதும் உரிய நேரத்துக்கு முன் வாக்குச்சாவடிக்குள் வந்ததால் அவர்களுக்கு ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தம் 72.09 % வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார். இதில், அதிகபட்சமாக கள்ளக்குறிசி தொகுதியில் 75.67 சதவீதம் பதிவானதாக தெரிவித்தார். குறிப்பாக, கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் 10 % வாக்குகள் பதிவதான சாஹூ தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் நடைபெற்ற நேற்றைய முதல்கட்ட வாக்குப்பதிவில் பெருமளவில் மக்கள் வாக்களித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் 69 சதவிகிமே வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 72.4 சதவீத வாக்குகள் பதிவாகியது. ஆனால், 69.46 சதவீத வாக்குகளே பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக வாக்குப் பதிவான தருமபுரி தொகுதியில் கடந்த தேர்தலில் 82.33% வாக்குகள் பதிவாகி இருந்தன. கள்ளக்குறிச்சி 79.25%, பெரம்பலூரில் 77.37%, சிதம்பரம் 75.32% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நாமக்கல்லில் 78.16%, கரூரில் 78.621%, அரக்கோணத்தில் 74.08% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆரணி 75.65%, சேலம் 78.13%, விழுப்புரம் 76.47%, திருவண்ணாமலை 73.88%, வேலூர் 73.42% வாக்குகள் பதிவாகி உள்ளன.

நாகை 71.55%, திருப்பூர் 70.58%, திருவள்ளூர் 68.31%, தேனி 69.87%, மயிலாடுதுறை 70.06%, ஈரோடு 70.54% வாக்குப்பதிவு. காஞ்சிபுரம் 71.55%, கிருஷ்ணகிரி 71.31%, கடலூர் 72.28%, விருதுநகர் 70.17%, பொள்ளாச்சியில் 70.70% வாக்குப்பதிவு. திண்டுக்கல் 70.99%, திருச்சி 67.45%, கோவை 64.81%, நீலகிரி 70.93%, தென்காசி 67.55%, சிவகங்கை 63.94% வாக்குப்பதிவு. ராமநாதபுரம் 68.18%, தூத்துக்குடி 59.96%, நெல்லை 64.10%, கன்னியாகுமரி 65.46%, தஞ்சை 68.18% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.

மேற்கு வங்கத்திலும், மணிப்பூரிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தபோதிலும் நேற்றைய 102 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவில்  முதல்கட்ட தேர்தலில் சராசரியாக 60.03 சதவீத மக்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் நேற்றைய இரவு  7 மணி நிலவரப்படி 59.5 சதவீத வாக்குகளும், மத்திய பிரதேசத்தில் 66.7 சதவீத வாக்குகளும் பதிவாகின. நேற்று மேற்கு வங்கத்தில்தான் அதிக வாக்குகள் பதிவாகியிருந்தன. அங்கு 77.6 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இது பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கடந்த 2019இல் பாஜக மொத்தம் 42 தொகுதிகளில் 18இல் வெற்றி பெற்றது.

மேலும் பாஜக வலுவாக உள்ள வடகிழக்கு பிரதேசங்களில் நேற்று அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன. திரிபுராவில் 80.6 சதவீதமும், மேகாலயாவில் 74.5 சதவீதமும், அசாமில் 72.3 சதவீதமும், மணிப்பூரில் 69.2 சதவீதமும், அருணாச்சல பிரதேசத்தில் 67.7 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவும் பாஜகவுக்கு பெரும் சாதகமாக அமையலாம்.

மக்களவை தேர்தலுடன் நேற்று சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் சிக்கிமில் கடந்த 2019ல் 81.4 வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை 68 சதவீத வாக்குகளும், அருணாச்சல பிரதேசத்தில் கடந்த முறை 65.1 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 68.3 வாக்குகள் பதிவாகி உள்ளன.