சென்னை: நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில்,  பல கிராம மக்கள், மாநிலஅரசின் நடவடிக்கைக்கு எதிராக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், படித்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும்   சென்னையில் மாநிலத்திலேயே குறைந்த அளவிலான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்ற வாக்குப்பதிவில் 60 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த தேர்தல்களை விட குறைவு. குறிப்பாக சென்னையில் வாக்குப்பதிவு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் ஏராளமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்த விடுப்பட்ட இருந்ததும்,  வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்களாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2009, 2014 மற்றும் 2019 ஆகிய மூன்று பொதுத் தேர்தல்களிலும் முறையே 73.02%, 73.74% மற்றும் 72.47% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், இந்த முறை 69.46 சதவிகிதம் வாக்குகளே பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. மேலும்,  மூன்று லோக்சபா தொகுதிகளைக் கொண்ட சென்னையில்  குறைந்த அளவிலேயே  வாக்குப்பதிவாகி உள்ளது.   மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும், தெற்கு சென்னையில் 67.82%  வாக்குகளும், வடசென்னையில் 69.23% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தம் 72.09 % வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார். ஆனால், இன்று அதிகாலையில், வாக்குப்பதிவு 69.46 சதவிகிதம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் நடைபெற்ற நேற்றைய முதல்கட்ட வாக்குப்பதிவில் பெருமளவில் மக்கள் வாக்களித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் 69 சதவிகிமே வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 72.4 சதவீத வாக்குகள் பதிவாகியது. ஆனால், 69.46 சதவீத வாக்குகளே பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்குப்பதிவு குறைவுக்கான காரணங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வாக்காளர் பட்டியலில் இருந்து எராளமானோர் பெயர் விடுபட்டது எப்படி என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

சென்னை போன்ற நகரங்களில் உள்ள  பணி நிமித்தமாக வசித்து வரும் மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்கள், சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க போதுமான போக்குவரத்து வசதி இல்லை என்றும், பேருந்து ஏற கிளாம்பாக்கம் செல்வதே பெரும் தொல்லையாக இருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், பேருந்து கட்டணம் உள்பட பயண செலவை கணக்கில் கொண்டு, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

மற்றொரு தரப்பினர் 3 நாள் விடுமுறை என்பதை மட்டுமே நினைவில்கொண்டு, தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டாமல்,  யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒன்றும் மாறப்போவதில்லை என்ற மன நோக்கில், குடும்பத்தோடு குதூகலமாக சுற்றுலாத்தலங்களுக்கு படையெடுத்துள்ளனர்.

இதுமட்டுமின்றி,  வாக்களிப்பத குறித்து, தேர்தல் ஆணையம் சார்பில் போதுமான  வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்  எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு வறப்படு கிறது.

இதுமட்டுமின்றி,  வேங்கைவயல்  பிரச்சினை, பரந்தூர் விமான நிலையம் உள்பட  பல அடிப்படை பிரச்சினைகளை சுட்டிக்காட்டி,  மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ள தவறிய மாநிலஅரசின் நடவடிக்கையை எதிர்த்தும். பல கிராம மக்கள் தேர்தலை முழுமையாக புறக்கணித்தும், வாக்குப்பதிவு குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

இ,ந்த நிலையில், படித்தவர்கள் அதிகம் வாழும் சென்னையில்  வாக்குப்பதிவு குறைவு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய  மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “தேர்தல் ஆணையம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்தது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இருந்தபோதிலும், நகர்ப்புறத்தில் இருக்கும் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாததே வாக்கு சதவிகிதம் குறைவுக்கு காரணம்” என்றார்.

சென்னையில் அதிகமான வாக்குப்பதிவை மேற்கொள்ள 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், இந்த வாக்குப்பதிவு சதவீதமும் வந்திருக்காது. வெயிலின் காரணமாக பகலுக்குப் பிறகு வாக்காளர்களிடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, அடுக்குமாடி குடியிருப்பவர்கள் பலரும் வாக்களிக்க வருவதற்கான முயற்சிகளை எடுக்க தயங்குகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, அதிகளவு வாக்குப்பதிவை மேற்கொள்ள மண்டல அளவிலான அதிகாரிகள் மூலமாகவும் நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம். தொடர் விழிப்புணர்வு மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் 188 கேமராக்களின் கண்காணிப்பில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அறை முன்பு யாரும் செல்ல முடியாது. அந்தப் பகுதி மத்திய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும். தமிழக காவல் துறை, பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1095 பேர் மூன்று ஷிப்ட்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை யாராலும் திறக்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் உடன்தான் அதை திறக்க முடியும். அரசியல் கட்சியினர் சார்பில் வருபவர்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பக்கத்து அறையில் இருந்து, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று அவர் கூறினார்.

 

திருவள்ளூரை தொடர்ந்து தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் , தூத்துக்குடி பொட்டலூரணி கிராம மக்கள்…

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 72.09% இல்லை; 69.46%தான் ! மக்களை குழப்பிய தேர்தல் ஆணையம்…