காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே துப்பாக்கிய காட்டி மிரட்டி கொள்ளையடித்துச்சென்ற வடமாநில கொள்ளையர்களை பிடிக்க சென்ற காவல்துறையினர், கொள்ளையர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவன் உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மாலை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்மணியிம் வடமாநிலத்தைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள் 6 சவரன் நகையைப் வழிப்பறி செய்தனர். அப்போது மூதாட்டி எழுப்பிய குரலைக்கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து கொள்ளையர்களை மடக்கினர். ஆனால், அவர்கள் அப்போது, கைத்துப்பாக்கியை காட்டி, பொதுமக்களை சுட்டு விடுவதாக மிரட்டிவிட்டு இருவரும் தப்பித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கொள்ளையர்களை பிடிக்க திட்டமிட்டு, சுற்று வட்டாரப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினார். 100க்கும் மேற்பட்ட போலீசார் பத்து குழுக்களாகப் பிரிந்தும், 5 டிரோன்களையும் கொண்டும் தேடுதல் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் சென்றனர். ஆனால், அவர்களிடமும் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ள அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சுடப்பட்டு இறந்தவரின் உடலை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரபரப்பில் தப்பியோடிய மற்றொரு நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் நடத்திய என்கவுண்டரில் உயிரிழந்த நபர் ஜார்கண்ட்டை சேர்ந்த முர்தஷா என்பது தெரிய வந்துள்ளது.