வட கொரிய ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேல் சென்றதால் பரபரப்பு !

Must read

சியோல்

டகொரிய ஏவுகணை சோதனையில் ஒரு ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேல் சென்றதால் ஜப்பான் பரபரப்பு அடைந்துள்ளது.

வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை உலக நாடுகள் அனைத்துமே கண்டித்து வருகின்றன.    ஆனால் அதை சிறிதும் சட்டை செய்யாமல் ஏவுகணை சோதனைகளை வட கொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது,    சமீபத்தில் ஒரு விமானத்தின் பாதையில் ஏவுகணை செலுத்தப்பட்டதும்,  சுமார் 500 கிமீ தூரத்தில் விமானம் தப்பியதும் தெரிந்ததே.

இது வரை வட கொரியாவின் ஏவுகணைகல் எதுவும் ஜப்பானின் மேல் சென்றதில்லை.   ஆனால் தற்போது ஒரு ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேல் பறந்து சென்றுள்ளது.    இதை இரு நாடுகளும் ஒத்துக் கொண்டுள்ளன.    இந்த ஏவுகணை சுமார் 2700 கி மீ தூரம் பயணித்துள்ளது.   இது வட கொரியா அமெரிக்காவை மிரட்ட நிகழ்த்தியதாக உலக நாடுகள் கருத்து தெரிவிக்கின்றன.

ஜப்பான் நாட்டில் இந்த ஏவுகணை பற்றி கடும் பரபரப்பும் அச்சமும் நிலவி வருகின்றன.   ஜப்பான் அரசு மக்கள் இது பற்றி ஏதும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் மக்களை காப்பாற்ற எப்போதும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.    மெலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இது குறித்து புகார் அளிக்க உள்ளதாகவும் கூறி உள்ளது.    வட கொரிய அரசு,  ஏவுகணையை அனுப்பியதை ஒப்புக் கொண்டாலும், அது குறித்து வருத்தம் தெரிவிக்கவில்லை.

More articles

Latest article