பியாங்யாங்: வடகொரியா – அமெரிக்கா இடையிலான அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை அக்டோபர் 5ம் தேதி மீண்டும் துவங்குமென வடகொரியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விவகாரங்களுக்கான வடகொரியாவின் முதல் துணை அமைச்சர் சோ சோன் ஹூய் இதை தெரிவித்தார்.

அக்டோபர் 4ம் தேதி வடகொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும், பூர்வாங்க தொடர்பை மேற்கொண்டு, அதன்பிறகு அக்டோபர் 5ம் தேதி செயல்பாட்டிற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வடகொரியாவின் அதிகாரப்பூர்வ கொரியன் மத்திய செய்தி ஏஜென்சியால் வெளியிடப்பட்ட அறிவிப்பில், இந்தப் பேச்சுவார்த்தை சிறந்த பலன்களைக் கொண்டுவரும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ள சோ சோன், அந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள இடம் குறித்த விபரங்களைத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.