லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் அந்நாட்டு பெண் பத்திரிகையாளர் ஒருவர்.

சார்லோட் எட்வர்டேஸ் என்று அந்தப் பெண்மணி, சன்டே டைம்ஸ் பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருக்கிறார்.

கடந்த 1999ம் ஆண்டு ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் போரிஸ் ஜான்சன் என்று தெரிவித்துள்ளார் அவர். அச்சமயத்தில் ஸ்பெக்டேடர் மேகஸின் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார் ஜான்சன் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவரின் பாலியல் சீண்டலை சகிக்க முடியாமல் தான் நிமிர்ந்து உட்கார்ந்ததாக கூறியுள்ளார் அவர். மேலும், அதே நிகழ்ச்சியில் மற்றொரு பெண்ணிடமும் இதேபோன்றதொரு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் ஜான்சன் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார் அப்பெண்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பிரதமர் தரப்பில் மறுத்துள்ளனர். அதில் எந்த உண்மையுமில்லை என்றும் கூறியுள்ளனர்.