வட கொரியா:
வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்கள் இனி நாடு திரும்பலாம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வடகொரியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் கொரோனா பரவல் தணிந்து விட்டதால் வெளி நாடுகளில் வசிக்கும் குடிமக்கள் இனி நாடு திரும்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், வெளிநாட்டிலிருந்து திரும்புவோர் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட கொரியாவின் தேசிய விமான நிறுவனமான Air Koryo மூன்று ஆண்டுகளுக்கு பிறகு உலகளவில் விமான சேவைகளைத் தொடங்கியது.
2020ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாகக் கடந்த மாதம் வெளிநாட்டுப் பிரமுகர்கள் பியோங்யாங்கில் (Pyongyang) ராணுவ அணிவகுப்பைக் காண அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.