திண்டுக்கல்:

மிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்,  மாநகர், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றிய  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி, மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடிடினார்.

சுயமரியாதை இல்லாத கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

செயல்வீரர்கள் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,  மோடி அரசு பாராளுமன்றத்தில் குடி உரிமை தடை சட்ட மசோதாவை  நிறைவேற்றி உள்ளது.  இதை நடைமுறைப்படுத்தினால் இந்திய ஜனநாயக அடித்தளமே ஆட்டம் காணும் என்று கூறியவர்,  இந்த குடியுரிமை தடை மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது கொடுமையானது என்றும்,  இங்உள்ள அ.தி.மு.க. அரசு மோடி அரசுக்க கைகட்டி கூனிக்குறுகி பணிந்து, சுயமரியாதை இல்லாத கட்சியாக இருந்து வருகிறது என்றும் கடுமையாக சாடினார்.

தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் சுமார்  5 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் தற்போது மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை மசோதாவால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது, அவர்களது நிலை ஆபத்தில் உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், மோடி அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக, நாடு,  பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது, இதனால், மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. தமிழகத்திற்கும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால், அதை  கேட்காமல் சுயமரியாதை இல்லாத கட்சியாக அ.தி.மு.க. இருப்பதாகவும் கூறினார்.

மேலும், தமிழகத்தில்  உள்ளாட்சித் தேர்தல் வேண்டாம் என்று தி.மு.க., காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் வழக்கு தொடரவில்லை. முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காகத் தான் நீதிமன்றம் சென்றுள்ளோம். இட ஒதுக்கீட்டை தமிழக தேர்தல் ஆணையம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. இட ஒதுக்கீடு வரைமுறை செய்யப்படவேண்டும் என்றவர், இந்த பிரச்சினையில்,  குழப்பவாதி அண்ணா தி.மு.க. தான். திமுக கிடையாது. அமைச்சர் ஜெயக்குமார் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.