ஐதராபாத்: அவதூறு வழக்கில், ஆஜராகாத காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டை ஐதராபாத் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கடந்த 2017-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியபிரதேச  முதல்வரும், திக்விஜய்சிங் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது. புகாரில், பண ஆதாயத்துக்காகவே பிற மாநில தேர்தல்களில் போட்டியிடுவதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சியை  திக்விஜய் சிங் கூறியதற்காக அவதூறு வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை ஐதராபாத்தில், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் தனி கோர்ட்டில்  நடைபெற்று வருகிறத. வழக்கின் விசாரணைக்கு திக்விஜய்சிங் ஆஜராகாத நிலையில், பிப்ரவரி 22ந்தேதி (நேற்று) விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. ஆனால், நேற்றைய விசாரணைக்கும்  திக்விஜய்சிங் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக  நேரில் ஆஜராக விலக்கு கோரி அவரது வக்கீல் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி,  திக்விஜய் சிங்குக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

அதத்துடன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி மார்ச் 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.