சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் குறித்து அதிகாரிகள் பரபரப்பாக ஆய்வு செய்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் இபிஎஸ், ஓபிஎஸ், மு.க. ஸ்டாலின், டிடிவி உள்பட முக்கிய தலைவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது. தேர்தலில் போட்டியிட 6,319 பேர் வேட்பு மனுக்கள் தாக்கர் செய்திருந்தனர். இவ்ற்றில் ஆண்கள் 5,363 மனுக்களும், பெண்கள் 953 மனுக்களும், மூன்றாம் பாலினத்தவா் சார்பில் 3 வேட்புமனுக்களும் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.
முதலமைச்சர் கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மநீம தலைவர் கமல்ஹாசன், சீமான் உள்பட கட்சித்தலைவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் வேட்பு மனு ஏற்பு
போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிடும் துணைமுதல்வரும், அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு ஏற்பு
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு
கோவில்பட்டியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்பு.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு ஏற்பு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு ஏற்பு
சென்னை, ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவின் வேட்பு மனு ஏற்பு
சென்னை – சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு
சொத்துவிவரங்களை முறையாக காட்டவில்லை என சுயேச்சை வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் சைதை துரைசாமி மனு நிறுத்தி வைப்பு
அதேவேளையில், திருநெல்வேலி அமமுக வேட்பாளர் பால்கண்ணன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.