திமுகவுக்கு இணையாக யாரும் இறைப்பணி செய்வதில்லை : அமைச்சர் ரகுபதி

Must read

புதுக்கோட்டை

திமுகவினருக்கு இணையாக யாரும் இறைப்பணி செய்வதில்லை எனத் தமிழக அமைச்சர் எஸ் ரகுபதி தெரிவித்துள்ளார்.

நேற்று புதுக்கோட்டை திருக்கோகரணம் பிரகதாம்பாள் கோவிலில் அர்ச்சகர்களுக்குப் பசுக்கள் வழங்கும் விழா நடந்தது.   இந்த விழாவில் கோவில்களில் உபயமாக வரப்பெற்ற பசுக்களை ஒருகால பூஜை திட்டம் செயல்படும் கோவில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் 18 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை தாக்கினார்.  அமைச்சர் ரகுபதி  பசுக்களை வழங்கினார்.   அதன் பிறகு பிரகதாம்பாள் கோவில் குடமுழுக்கு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார்.  ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி, “:தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையால் இந்து சமய அறநிலையத் துறையின் மதிப்பு உயர்ந்துள்ளது. கோயில் திருப்பணிக்கு ரூ.100 கோடியைத் தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார்.இறைப்பணி செய்வதில் திமுகவினருக்கு இணையானவர்கள் யாரும் இருக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போதைய திமுக ஆட்சி செயல்படுகிறது” என உரையாற்றி உள்ளார்.

More articles

Latest article