அதானியின் துறைமுகத்தில் ஹெராயின் பறிமுதல் செய்தி : கலைஞர் டிவி மீது பாஜக புகார்

Must read

சென்னை

பிரதமர் மோடி குறித்து கலைஞர் டி.வி அவதூறான செய்தி வெளியிட்டு இருப்பதாக காவல்துறையிடம் பாஜக  புகார் அளித்துள்ளது.

 கலைஞர் டிவியின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி ஒன்று பதிவாகி இருந்தது.  அதில் ”அதானி துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்… மோடியின் தயவுடன் போதைப்பொருள் கடத்தல்?” எனத் தலைப்பு இடப்பட்டிருந்தது.  இது பாஜக வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இது குறித்து  சென்னை திநகர் காவல் நிலையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.

அந்த புகார் மனுவில்

”கலைஞர் டி.வி தனது டிவிட்டர்’ பக்கத்தில், ‘அதானியின் துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல், மோடியின் தயவுடன் போதைப்பொருள் கடத்தல்?’ என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இத்தைகைய பதிவு உண்மைக்கு புறம்பானது, மேலும்மிகவும் அவதுாறானது.

இது பிரதமர் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு புனையப்பட்ட செய்தி என்பதும் எந்த உண்மையோ, ஆதாரமோ இல்லை என்பதும் தெரிந்ததே,

இந்த செய்தியை கலைஞர் டிவி நிராகத்தினர்பிரதமருடைய புகழுக்கும், பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு, தவறான எண்ணத்தில் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர். எனவே, இதுதொடர்பாக, கலைஞர் டி.வி., மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

எனக் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article