சென்னை,
திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்க்க யாரும் வரவேண்டாம் என்று திமுக அறிவித்து உள்ளது.
கடந்த சில நாட்களாக ஒவ்வாமை காரணமாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்பினார்.
அவரது உடல்நலம் குறித்து திமுக தலைமை கழகம்  இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
karunanidhi-stalin
தலைவர் கலைஞர் அவர்கள் சென்னை காவேரி மருத்துவ மனை யில்  கடந்த சில நாட்களாகச் சிகிச்சை பெற்று,  நேற்றைய தினம்  (7-12-2016) இல்லம் திரும்பியுள்ள போதிலும்,   தலைவர் கலைஞர் அவர்கள்  மேலும் சில நாட்களுக்கு  ஓய்வெடுத்துக் கொள்ள  வேண்டு மென்றும், அதுவரை “நோய்த்தொற்று”க்கு ஆளாகாமல் மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டுமென்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
எனவே தலைவர் கலைஞர் அவர்களைப் பார்க்க நேரில் வருவதைத் தவிர்த்து  கழகத் தோழர்களும், நண்பர்களும் முழுமையாகவும், கண்டிப்பாகவும்  ஒத்துழைக்க வேண்டுமென்று  அன்புகூர்ந்து  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.