சென்னை,
ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த வருவோருக்கு இலவச உணவு, தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கி அதிமுக தொண்டர்கள் உதவி வருகின்றனர்.
டந்த 5ந்தேதி நள்ளிரவு நம்மை விட்டு பிரிந்தார். அதைத்தொடர்ந்து 6ந்தேதி மாலையே அவரது உடல் நல்லடக்கக்கம் செய்யப்பட்டது.
கடந்த ஐந்தாம் தேதி இரவு காலமான ஜெயலலிதாவின் உடல்  மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவகம் அமைந்துள்ள வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
jaya_10171
அவசர கதியால் நடத்தப்பட்ட அவரது இறுதி சடங்கால், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள்  அவரது முகத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி சென்றுள்ளனர்.
அஞ்சலி செலுத்த வருவோருக்கு தேவையான உணவுகள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் இலவச  வழங்கி அதிமுக தொண்டர்கள் தங்களின் தலைவியின் தாராளமயத்தை பறைசாற்றி வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை கழகம் செய்துள்ளதாக தெரிகிறது.