நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஸ்டாலினுடன் சந்திப்பு!

Must read

சென்னை,

லக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தி திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

நோபல் பரிசுபெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, ‘பாதுகாப்பான குழந்தைப்பருவம், பாதுகாப்பான இந்தியா’ என்ற கோஷத்தை முன்வைத்து, பேரணியை ஆரம்பித்துள்ளார். இந்தப் பேரணி 22 மாநிலங்கள் வழியாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, அக்டோபர் 16-ம் தேதி அன்று புதுடெல்லியைச் சென்றடைகிறது. இந்நிலையில், கைலாஷ் சத்யார்த்தி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

இந்தியாவில் ஒரு மணிநேரத்தில் இரண்டு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவதாக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து குமரி முதல் தலைநகர் டில்லி வரை  யாத்திரை மேற்கொண்டு வருகிறார் கைலாஷ் சத்யார்த்தி.

இந்த யாத்திரை குமரியில் தொடங்கி  22 மாநிலங்கள் வழியாக சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, அக்டோபர் 16-ம் தேதி அன்று  டில்லியை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை வந்துள்ள அவர் லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதையடுத்து, திமுக செயல்தலை வர் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வந்த அவர் அவருடன் சிறிது நேரம் உரையாடினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கைலாஷ்சத்யார்த்தி,  இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இதை தடுக்க வேண்டியது நமது அனைவரின் கடமை என்று வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு குறித்து ஸ்டாலின் தனது பேஸ்புக் தளத்தில் கூறியிருப்பதாவது, , 35 ஆண்டுகளாக குழந்தைகளை பாதுகாப்போம் என்ற இயக்கத்தை கைலாஷ் சத்தியார்த்தி  நடத்தி வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும்,  அனைத்து மதத்தினரையும், அரவணைத்து செல்வது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு சான்றாக விளங்குவதாகவும் தெரிவித்து உள்ளார்.

கைலாஷ் சத்யார்த்தி ஏற்கனவே,  “கல்வி பெறுவது” குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ற போராட்டத்தை நடத்திய இருப்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article