சென்னை,

மிழ் நாட்டில் இவ்வாண்டும் தமிழக முதல்வரின் அலட்சியத்தால் விவசாயப் பணிகள் முடங்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. காவிரி விவசாயிகளை அழிக்கப் பார்கிறார் முதல்வர எடப்பாடி பழனிச்சாமி எனறு விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது

குடி மராமத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட 2016-17க் கான தொகை ரூ 100 கோடி முற்றிலும் பணிகள் மேற்க்கொள்ளாமலேயே சிலவு செய்துள்ளதாக ஊழல் முறைகேடு செய்துள்ளனர்.

2017-18 ஆம் ஆண்டிற்க்கு ஒதுக்கீடு செய்த தொகை ரூ 300 கோடிக்கான பணிகள் விவசாயிகளுக்கு சம்பந்தமில்லாமல் ஆளும் கட்சி பிரமுகர்களே விவசாய குழுக்கள் அமைத்துள்ளதாக சொல்லி பணிகளை தேர்வு செய்து முடித்து விட்டதாக முழு தொகையையும் ஊழல் முறைகேடுகள் மூலம் அபகறிக்க முயற்ச்சித்து வருகிறார்கள்.

இத்திட்டத்திற்க்கான நிதி முழுமையும் நபார்டு வங்கி வழங்குவதாக் ஊழல் முறைகேடின்றி பணிகள் மேற்க்கொள்ள மாவட்டம் தோறும் நபார்டு வங்கியே விவசாயிகள் கூட்டத்தை கூட்டி பணிகளை மேற்க்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மறுக்கும் பட்சத்தில் நபார்டு வங்கியே ஊழல் முறைகேடுகளுக்கு துணை புரிவதாக சிபிஐ விசாரணை கேட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். காவிரி டெல்டாவில் ஆறு, பாசண ,வடிகால்கள் தூர் வாரப்படாமலும், பாசண கட்டுமானங்கள் பராமறிக்கப்படாததாலும் கிடைக்கும் காவிரி நீர் விளை நிலங்களுக்கு சென்றடையாமலும், மழை காலத்தில் வெள்ள பெருக்கு ஏற்ப்படும் பேராபத்து உள்ளது.

விவசாயிகள் கருத்தறிந்து மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். குறிப்பாக 90 அடி நிரம்பும் நிலையில் தண்ணீர் திறப்பதும்,நிரம்பாத பட்சத்தில் செப்டம்பர் இறுதியில் திறந்தால் கிடைக்கும் வடகிழக்கு பருவ மழையையும் பயன்படுத்தி குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து விவசாயத்தை . பாதுகாக்க முடியும் என்று வலியுறுத்தினோம்.

மேலும் காவிரி புஷ்கார விழாவிற்க்கு மாயனூர் அனையில் தேக்கப்பட்டுள்ள 1 டி.எம்.சி தண்ணீரை கொண்டு செல்லலாம் என்றால் அதனையும் ஏற்க்க மறுத்து வினாடிக்கு 10000ம் கன அடி தண்ணீரை செப்டம்பர் 24ந் தேதி வரை மேட்டூரிலிருந்து திறக்கப்பட்டிருப்பது கண்டிக்கதக்கது.

சென்ற ஆண்டு மகாமகத்திற்க்கு 30 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் திறந்து வீணடிக்கப்பட்டதால் காவிரி டெல்டா முற்றிலும் அழிந்தது. இவ்வாண்டு காவிரி புஷ்க்கார விழாவிற்க்காக தண்ணீர் திறக்கப்படுவதால் நடப்பாண்டும் காவிரி டெல்டா விவசாயம் அழியக்கூடிய பேராபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே திட்டமிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி டெல்டா விவசாயிகளை அழிக்க பார்க்கிறார். இச் செயல்களை விவசாயிகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

உடன் தஞ்சை மண்டல தலைவர் டி.பி.கே.ராஜேந்திரன், மன்னார்குடி ஒன்றிய தலைவர் எம்.மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.