பொதுக்குழுவில் கலந்துகொண்ட தளவாய் சுந்தரம் நீக்கம்! டிடிவி அதிரடி

சென்னை,

மீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொண்ட முன்னாள் எம்.பி. தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக டிடிவி அறிவித்து உள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, டிடிவி ஆதரவாக செயல்பட்டுவந்தவர் முன்னாள் எம்.பி. தளவாய் சுந்தரம். அவருக்கு டிடிவி தினகரன் அதிமுக அமைப்பு செயலாளர் பதவி அளித்திருந்தார். மேலும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும்  நியமிக்க முயற்சித்து வந்தார்.

இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் தளவாய் சுந்தரம் கலந்துகொண்டார். இது பரபரப்பாக பேசப்பட்டது. டிடிவியின் சிலிப்பர் செல்லாக தளவாய் கலந்துகொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில்,  அதிமுக அமைப்பு செயலாளராக உள்ள தளவாய் சுந்தரத்தின் பதவியை பறித்து டிடிவி தினகரன்  உத்தரவிட்டுள்ளார்.

Tags: Thalavai sundaram removed from the party post, TTV dhinakaran announce, பொதுக்குழுவில் கலந்துகொண்ட தளவாய் சுந்தரம் நீக்கம்! டிடிவி அதிரடி