ஐசிசி ஒரு பல்பிடுங்கப்பட்ட தொழில்முறை இல்லாத அமைப்பாக மாறியுள்ளது என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார்.

“சரத்பவாரும் டால்மியாவும் கிரிக்கெட் விளையாட்டில் டில் கவனம் செலுத்தினர் அவர்களுக்கு ஓரளவு அறிவும் பண்பும் இருந்தது.

ஆனால் பிசிசிஐ தற்போது எதேச்சதிகாரப்போக்குடன் நடந்துவருகிறது. ஒரு அணிக்கான விதிகளை மாற்றியது குறித்து இலங்கை உள்ளிட்ட மற்ற எந்த நாட்டு கிரிக்கெட் வாரியமும் கண்டிக்காதது வேதனையளிக்கிறது.

ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பத்திற்காக ஆசியக்கோப்பை போட்டிகளில் மாற்றம் செய்ய முடியும் என்றால், இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டிக்கு முன் ஐசிசி விதிகளை மாற்றினால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்” என்று அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார்.

அவர்கள் அப்படிச் செய்தாலும் அதற்க்கு வாயை மூடிக்கொண்டு “சரி” என்று தலையாட்டும் அமைப்பாக ஐசிசி மாறியுள்ளது என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.