சென்னை

கொரோனா வைரஸ் பீதியால் சென்னையில் ஐந்து நட்சத்திர விடுதிகள் தங்க ஆளில்லாமல் உள்ளன

கொரோனாவை ‘மூன்றாம் உலகப்போர்’’ என மேலை நாட்டு ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

உயிர்ச் சேதங்களைக் கணக்கிடும் போது அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.

கொரோனாவால் சென்னையில் ஓட்டல் வியாபாரம் படுத்து விட்டதாகப் புலம்புகிறார்கள்-நட்சத்திர விடுதி முதலாளிகள்.

சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் 200 ஸ்டார் ஓட்டல்கள் உள்ளன.

சுற்றுலாப் பயணிகள் தான் இந்த ஓட்டல்களின் ஒரே, வாழ்வாதாரம்.

கொரோனாவால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் வரவில்லை. உள்ளூர் ஆட்களையும் காணோம்.

தூங்கி வழிகின்றன நட்சத்திர ஓட்டல்கள்.

பொதுவாக நான்கு  நட்சத்திர ஓட்டல்களின் அறைகளுக்கு  ஒரு நாள் இரவுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 6 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பயணிகளைக் காணாததால், ஆயிரத்து 500 ரூபாய் வரை வாடகையைக் குறைத்தும்- சீந்துவார் இல்லை.

விடுமுறைக் காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில், வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் ஓட்டல் அறைகளின் ‘ரிசர்வேஷசன்’’ நிரம்பிவிடும்.

இந்த ஆண்டு . 6% அறைகள் மட்டும் ‘புக்’ ஆகியுள்ளன எனச் சோக கீதம் இசைக்கிறார்கள் , ஓட்டல் அதிபர்கள்.

– ஏழுமலை வெங்கடேசன்