சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக பிப்ரவரி 19ந்தேதி தடுப்பூசி மெகா முகாம் கிடையாது, அன்று நடைபெறுவதாக இருந்த தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் வாக்களிக்க செல்வதில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், அன்றைய தினம் நடைபெற இருந்த 23வது மெகா தடுப்பூசி முகாம்  செய்யப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2,792 ஊராட்சி, 24 நகராட்சிகளில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

ஒவ்வொரு வாரமும்  வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி முகாமும், சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்களும்ட  நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 22-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாம்களில் 15 -18 வயது சிறார்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாத அனைவரும் தவறாமல் பங்கேற்க அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.

அடுத்த மெகா தடுப்பூசி முகாம் அடுத்த சனிக்கிழமை, அதாவது பிப்ரவரி 19ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், அன்றைய முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.