12/02/2022: இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா – கடந்த 24மணி நேரத்தில் 50,407 பேர் பாதிப்பு 804 பேர் உயிரிழப்பு

Must read

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் மேலும் 50,407 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன்,  804 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, காலை 8 மணி வரையிலான கடந்த 24மணி நேரத்தில்,  50,407 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 7,600 குறைவு. நேற்று 58,077 ஆக இருந்த நிலையில் இன்று 50,407 ஆக குறைந்துள்ளது.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,25,86,544 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 804 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று உயிரிழப்பு 657 ஆக இருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. இதுவரை  5,07,981 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24மணி நேரத்தில், 1,36,962 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,14,68,120 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 6,10,443 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 1,72,29,47,688 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,82,662 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை  74,93,20,579* மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுஉள்ளது. நேற்று ஒரே நாளில்,  14,50,532 மாதிரிகள்  சோதனை செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article