சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், எந்தவொரு வாக்குச்சாடியிலும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 23ந்தேதி மிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும்  மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குப்பதிவின்போது, சில வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக சில சர்ச்சைகள் எழுந்தன. இதனால், அந்த பகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறுமா என கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர்,  மாநிலத்தில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை என  தேர்வித்துள்ளார்.

தேர்தலையொட்டி, தமிழகத்தில் 33,133 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில், 3,025 இடங்களில் உள்ள 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில் மொத்தமுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இவை மெரினா ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் மாநகர காவல்துறை எனப் பல்வேறு பிரிவினர் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

[youtube-feed feed=1]