தமிழகத்தில் அரசியல் விளையாட்டு எடுபடாது: முதல்வர் ஸ்டாலின்

Must read

சென்னை:
மிழகத்தில் அரசியல் விளையாட்டு எடுபடாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், மூவர்ண கொடியை போற்றுவோம், மூட அரசியல் தனத்தை அடக்குவோம். இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டின் மூவர்ண கொடிகளையும், விடுதலைக்காக பாடுப்பட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். இது தமிழகம்! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது. மூட அரசியல்தனத்தை சட்டப்படி அடக்குவோம். தேசபக்தி என்றாலே லேபிள் ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தை சட்டப்படி அடக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article