துரை

லைவர்கள் அல்லது வேறு எந்தப் படங்களையும் வாகனங்களில் ஒட்டப்படுவதற்கு மதுரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொதுவாக வாகனங்களில் தலைவர்கள் உள்ளிட்ட பல படங்கள் ஒட்டப்படுகின்றன.  ஒரு சிலர் கட்சிக் கொடிகளின் படங்களை ஒட்டி வைக்கின்றனர்.   மேலும் நம்பர் பிளேட்டுகளில் விதிமுறைகளுக்கு மாறாக எண்களைப் பதிவதும் சிலருக்கு வழக்கமாக உள்ளது.  இதை எதிர்த்ஹ்டு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நடந்து முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.  தற்போது  இந்த மனு மீதான தீர்ப்பு வெளியாகி உள்ளது.  அதில், ”வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் மற்றும் மற்றும் கட்சியின் தலைவர்களின் புகைப்படங்கள் அரசியல் கட்சியினருக்குத் தேர்தல் நேரங்களில் பயன்படுத்தலாமே தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. மேலும் வாகனங்களில் தடைசெய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் விதிமுறை மீறிய நம்பர் பிளேட்களை நீக்க வேண்டும்

தற்போது அதிகரித்து வரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகளைப் பராமரிப்பது இல்லை.  வெளிச்சம் குறைவான இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும், ஜீப்ரா கிராஸ் மற்றும் தேவையான இடங்களில் சாலை தடுப்பு அமைத்து சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்க வேண்டும். தற்போதைய சூழலில் வழக்கறிஞர்/ பிரஸ்/காவல்துறை போன்ற ஸ்டிக்கர்களை வாகனங்களில் அதிகமாக ஒட்டி உள்ளனர். இதைப் போல் ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் அதிக அளவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது இதுகுறித்து பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.