சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளன என்று தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகளின் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள், உடனடியாக ஆக்சிஜனை தொழிற்சாலைகளுக்கு வழங்காமல்,  மருத்துவமனைகளுக்கு வழங்கவும், மேலும் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்தியஅரசு மற்றும் நீதிமன்றங்களும்  உத்தரவிட்டு உள்ளன. இதற்கிடையிலு, ஆக்சிஜன் ஏற்றி வந்த லாரிக்கு பாஜகவினர் பூஜை, அலங்காரம் செய்து கால தாமதம் ஏற்படுத்தியதாக வட மாநிலங்களிலும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

அதுபோல, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும்,  தமிழக அரசுக்கு தெரியாமலேயே, தமிழகத்தில் இருந்த 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை  மற்ற மாநிலத்துக்கு மத்தியஅரசு எடுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில்,  தமிழகத்தில், மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளன, பற்றாக்குறை ஏதும் கிடையாது  என விளக்கம் அளித்துள்ளது.