சென்னை:
சென்னையில் 4 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து விடுவிப்பு செய்யப்படுவதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம்  419 பகுதிகள்   கட்டுப்பாட்டு மண்டலங்கள் என சென்னை மாநகராட்சி கடந்த வாரம் அறிவித்தது.
இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப் பட்டிருந்த நிலையில், தற்போது 4 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னையின் 4வது மண்டலத்தில் உள்ள வேதாந்த முருகன் தெரு, 9வது மண்டலத்தில் டிரஸ்ட்புரம் 1வது தெரு,  13வது மண்டலத்தல் அங்காளம்மன் கோயில் தெரு, 14வது மண்டலத்தில் கோலவிழி அம்மன் கோவில் தெரு ஆகிய 4 தெருக்கள் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது.