டில்லி:

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுத தேவையில்லை என்றும், அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும்  இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தற்போது நாடு முழுவதும் நீட் தேர்வு வாயிலாக மருத்துவம் படிக்க மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் சேர்ந்து மருத்துவம் படிப்பதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க வேண்டுமென்றாலும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்து உள்ளது.

மேலும் இந்த விலக்கு ஓராண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுத வேண்டிய தில்லை. இதன் காரணமாக மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.