சென்னை: புறநகர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், ரயில்களில் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவையும் குறைக்கப்பட்டது. மேலும், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதனால், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது தமிழ்கஅரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியும், ஊரடங்கை முழுமையாக விலக்கிகொண்டுள்ள நிலையில், தெற்கு ரயில்வேயும் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.
அதன்படி, இனிமேல் புறநகர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், ரயில்களில் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.